இன்றைய காலத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்களை விட தொழில் செய்ய விரும்பும், தொழில் செய்து கொண்டு இருக்கும் இளைஞர்களே அதிகமாக இருப்பதை காண முடிகிறது. வேலைக்கு போகும்போது உங்கள் உடை எப்படி இருந்தாலும் அதை பற்றி பெரிதும் கவலைப்பட தேவை இல்லை. ஆனால் நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக இருக்கும் போது நீங்கள் அணியும் உடையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், ஏன் என்றால் அது உங்கள் மேல் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலின் மேல் நம்பிக்கையை கொடுக்க கூடியது, ஆகவே நீங்கள் பிஸினஸ் நிமித்தம் ஒரு மீட்டிங் செல்லும்போது எப்படி ஆடைகள் அணிவது முக்கியமாக பிஸினஸ் கேஷூவல் ஆடைகள் அணிவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

- ஷர்ட்

பிஸினஸ் கேஷூவல் என்பது வேறு பார்மல் என்பது வேறு, நீங்கள் பிஸினஸ்மேனாக இருக்கும்போது பார்மல் அவுட்பிட் தான் அணியவேண்டும் என்பது அவசியம் இல்லை, அதற்காக பிஸினஸ் பணிகளுக்கு செல்லும்போது கேஷூவல் ஆடைகள் அணிவதும் தகுந்தது அல்ல, ஆனால் பிஸினஸ் கேஷூவல் ஆடைகள் இராந்திரக்கும் இடை பட்டவை. ஆகவே அதற்கு ஏற்றாற்போல் அவுட்பிட் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். பிஸினஸ் கேஷூவலாக பிளேஷர் (Blazer) அணிவதாக இருந்தால் அதற்குள் ஷர்ட், ரவுண்ட் அல்லது v நெக் டீ ஷர்ட் அல்லது போலோ டீ ஷர்ட் அணியலாம்
2. பேண்ட்

பிஸினஸ் கேஷூவலாக அணியும்போது காட்டன் பார்மல் பேண்ட், சினோஸ் பேண்ட், அல்லது டெனிம் பேண்ட் சிறந்த தேர்வாக இருக்கும். பேண்ட் தேர்வு செய்யும்போது நல்ல பிட்டிங்காக உள்ளதா என்பது மிகவும் அவசியம், நல்ல பிட்டிங்காக உள்ள ஆடைகள் உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தி காட்டும், நீங்கள் ஒரு பிஸினஸ்மேனாக இது மிகவும் அவசியம். பேண்ட் நிறங்களை தேர்வு செய்யும்போது பிளாக், கிரே,நேவி, பெயிஜ் போன்ற நிறங்களை தேர்வு செய்து அணிந்தால் நன்றாக இருக்கும்
3. லேயர்

பிஸினஸ் கேஷூவல் ஆடைகள் அணியும் போது அதனுடன் பிலேஷர், ஓவர் கோட் அல்லது ஸ்வெட்டர் கொண்டு லேயரிங் செய்யும்போது அது உங்களின் மதிப்பை இன்னும் சற்று மேம்படுத்தி காட்டும். நல்ல பிட்டிங் இருக்கும் பிலேஷர் அணியும்போது உங்களின் தோற்றம் வேறு விதத்தில் மாறி விடும்.
4. ஷூ

பிஸினஸ் கேஷூவல் அவுட்பிட் அணியும்போது அதற்கு மேட்ச் செய்து அணிவதற்க்கு லோபர், ஸ்னீக்கர், ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் பூட் மிக சிறந்த தேர்வாக இருக்கும். லெதர் லோபர் அல்லது வெள்ளை நிற ஸ்னீக்கர் பிஸினஸ் கேஷூவல் ஆடைகளுடன் அணியும்போது அது நிச்சயமாக ஒரு அற்புதமான தோற்றதை அளிக்கும்.