
திருமணம் மட்டும் இதர பங்க்ஷன்களுக்கு நீங்கள் செல்லும்போது அங்கு கூட்டதோடு கூட்டமாக நின்றால் கூட நீங்கள் தனித்துவமாக தெரியவேண்டும், எல்லோரும் உங்களை பார்க்க வேண்டும் என்று எல்லா ஆண்களுக்கும் ஆசை உண்டு, ஆனால் அப்படி தனித்துவமாக தெரிவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. எல்லோரும் அணியும் ஆடையில் இருந்து நீங்கள் அணிந்திருக்கும் ஆடை வித்தியாசமானதாக, மற்றவர்களிடத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதாக இருந்தால் மட்டுமே நீங்கள் தனியாக தெரிய முடியும். அப்படி எவ்வளவு கூட்டதில் இருந்தாலும் உங்களை தனியாக காட்டும் திறனுள்ள ஐந்து ஷர்ட்ஸ் என்னவெல்லாம் என்பதைதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
1.VELVET, SATIN AND SILK SHIRTS
இந்த வகை ஷர்ட்கள் லக்ஸரியஸ் ஷர்ட் என்று சொல்லுவார்கள், இதனை அணிந்தாலே உங்களுக்கு லக்ஸரியஸ் தோற்றம் தானாகவே வந்து விடும். இந்த வகை ஆடைகளில் உள்ள அதன் தனித்துவமான பினிசிங் மற்றும் பளீர் நிறங்கள் உங்களை கண்டிப்பாக மற்றவர்களிடம் இருந்து எளிதில் வேறுபடுத்தி காட்டும் பண்பை கொண்டது. கருப்பு அல்லது வெள்ளை நிற பேண்ட் மற்றும் அதனுடன் பேட்டன்ட் லெதர் பினிசிங் கொண்ட ஷூ மேட்சிஙகாக அணியும்போது உங்களை சுற்றி உள்ள அனைவரின் கண்களும் உங்களை நோக்கிதான் இருக்கும்
2.FLOWER PRINTED SHIRTS
பொதுவாகவே பிரிண்டட் டிசைன் இருக்கும் ஆடைகள் அணியும்போது, முக்கியமாக ஃபிளவர் (Flower), ஜியோ (Geo) பிரிண்டிங் இருக்கும் ஆடைகள் மற்றவர்களிடம் இருந்து உங்களை எளிதாக வேறுபடுத்தி காட்ட கூடிய பண்பை கொண்டவை. அதிலும் குறிப்பாக பளீர் நிறங்கள் (Bright Colors) அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறங்கள் காம்பினேஷன் கொண்ட பெரிய பிரிண்ட் (Big prints) இருக்கும் ஆடைகள் அணியும்போது நீங்கள் அந்த இடத்தில் ஹீரோவாக தெறிவீர்கள்.
3.MANDARIN COLLAR SHIRT
மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்றால் ஆடைகளில் பெரிய மாற்றம் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை, சிறிய மாற்றங்கள் கூட உங்களை தனித்துவமாக காட்டும். அப்படி சாதாரணமாக அணியும் காலர் ஷர்ட்களை விட மாண்டரின் அல்லது சைனீஸ் காலர் என்று அழைக்கபடும் காலர்களை கொண்ட ஷர்ட் அணியும்போது கூட உங்களை தனித்துவமாக காட்டமுடியும், நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
4.WHITE COTTON SHIRTS
வெள்ளை நிற காட்டன் ஷர்ட்களுக்கு என்று தனி பெருமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதனால்தான் வெள்ளை நிற காட்டன் ஷர்ட்கள் அரசியல்வாதிகளால் விரும்பி அணியபடுகிறது. இந்த கிளாசிக் ஷர்ட்டுடன் கருப்பு நிற பேண்ட் அல்லது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு லெதர் சான்டலுடன் அணியும்போது அதன் ஸ்டைல் வேறு விதமாக இருக்கும்.
5.DENIM SHIRTS
மேற்சொன்ன ஷர்ட்கள் போன்று இல்லாமல், மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் ஸ்பெஷலாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவார்கள் இந்த டெனிம் ஷர்ட் அணிந்து கொள்ளலாம். குறிப்பாக பேடட் (Faded) டிசைன் கொண்ட டெனிம் ஆடைகள் கண்டிப்பாக தனித்துவமான லுக் உங்களுக்கு தரவல்லது.