லோஃபர் ஷூ ஸ்டைலா அணிவதற்கான செமையான அவுட்ஃபிட் டிப்ஸ்

லோஃபர் ஷூ ஸ்டைலா அணிவதற்கான செமையான அவுட்ஃபிட் டிப்ஸ்

லோஃபர் ஷூ மாடல் கட் ஷூ இல்லனா ஸ்லீப் ஆன் ஷூவோட அட்வான்ஸ் மாடல் தான். நீங்க டிரெண்டியா, ஸ்டைலா டிரெஸ்ஸிங் பண்ணனும்னு விரும்புற ஒரு ஆணா இருந்தா எந்த ஷூ வச்சி டிரெஸ்ஸிங் பண்றீங்களோ இல்லையோ, கண்டிப்பா இந்த லோஃபர் ஷூ மட்டும் வச்சி ஒரு தடவை டிரை பண்ணி பாருங்க, ஏன்னா இந்த ஷூ பார்க்கிறதுக்கு ஸ்டைலா இருக்கிறது மட்டும் இல்ல, இதை அணியும்போது ஒரு ஜெண்டில்மேன் லுக் உங்களுக்கு கிடைக்கும், அதுவும் இல்லாம இந்த லோஃபர் ஷூ எல்லா அவுட் ஃபிட் கூடவும் அட்டகாசமா மேட்ச்

லோஃபர் ஷூ மாடல் கட் ஷூ இல்லனா ஸ்லீப் ஆன் ஷூவோட அட்வான்ஸ் மாடல் தான். நீங்க டிரெண்டியா, ஸ்டைலா டிரெஸ்ஸிங் பண்ணனும்னு விரும்புற ஒரு ஆணா இருந்தா எந்த ஷூ வச்சி டிரெஸ்ஸிங் பண்றீங்களோ இல்லையோ, கண்டிப்பா இந்த லோஃபர் ஷூ மட்டும் வச்சி ஒரு தடவை டிரை பண்ணி பாருங்க, ஏன்னா இந்த ஷூ பார்க்கிறதுக்கு ஸ்டைலா இருக்கிறது மட்டும் இல்ல, இதை அணியும்போது ஒரு ஜெண்டில்மேன் லுக் உங்களுக்கு கிடைக்கும், அதுவும் இல்லாம இந்த லோஃபர் ஷூ எல்லா அவுட் ஃபிட் கூடவும் அட்டகாசமா மேட்ச் ஆகும். இந்த பதிவில் லோஃபர் ஷூ வச்சி எப்படி செமையான அவுட் ஃபிட் உருவாக்கலாம்னு பாக்கலாம்.

1.கோட் சூட் அண்ட் லோஃபர்

கோட் சூட் அணியும்போது டெர்பி அல்லது ஆக்ஸ்போர்ட் ஷூ தான் பெரும்பானவர்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக நீங்கள் ஒரு முறை கோட் சூட் அணியும்பொழுது லோஃபர் ஷூ முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக இது ஒரு அற்புதமான தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும்.

2. ஃபார்மல் அண்ட் லோஃபர் ஷூ

நீங்கள் ஃபார்மல் பேண்ட் அண்ட் ஷர்ட் அணியும்போது இந்த லோஃபர் ஷூ அணிந்தால் மிகவும் ப்ரொபஷனல் லுக்கை உங்களுக்கு கொடுக்கும். நீங்கள் ஸ்லிப்பான் ஷூ அணிவதற்கு பதிலாக இந்த லோஃபர் ஷூ அணிந்தால் கண்டிப்பாக அதன் வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். குறிப்பாக கிராஃப்ட் பேண்ட் அணியும் பொழுது இந்த லோஃபர் ஷூ அணிந்தால் கவர்ச்சியான தோற்றத்தை உங்களுக்கு தரும்.

3. கேஷூவல் அண்ட் லோஃபர் ஷூ

லோஃபர் ஷூ ஃபார்மல் நேரங்களின் அணிவதற்கு மட்டுமல்ல, ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சினோஸ் பேண்ட் கேஷூவலாக அணியும்பொழுதும் அதற்கு மேட்ச் ஆக அணிந்து கொள்ளலாம். வீக்கெண்ட் அவுட்டிங், ஷாப்பிங் செல்லும் வேளைகளில் அணிந்து கொள்ள இந்த காம்பினேஷன் மிகவும் சிறந்தது.

4. ஷார்ட்ஸ் அண்ட் லோஃபர் ஷூ

நீங்கள் ஷார்ட்ஸ் அல்லது ஜாக்கர் அனியும்பொழுது அதனுடன் லோஃபர் ஷூ அணிந்து கொள்ள முடியும். சுவேட் லெதரால் செய்யப்பட்ட லோஃபர் ஷூ இந்த மாதிரியான அவுட் ஃபிட் அணியும் நேரங்களில் அணிந்து கொள்வதற்கு மிகவும் ஏற்றவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *